Paristamil Navigation Paristamil advert login

பதிவேற்றப்பட்ட வாக்காளர்கள் விபரம் இணையத்தில் வெளியீடு

பதிவேற்றப்பட்ட வாக்காளர்கள் விபரம் இணையத்தில் வெளியீடு

24 கார்த்திகை 2025 திங்கள் 14:53 | பார்வைகள் : 136


கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றப்பட்ட வாக்காளர்களின் விபரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, கடந்த 4ம் தேதி முதல் வரும், 4ம் தேதி வரை, வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

இப்பணியில், 68,470 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 6.15 கோடி பேருக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு உள்ளது. இது, 95.6 சதவீதம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள், நேற்று வரை 2.59 கோடி பேரிடம் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இது, 40.4 சதவீதம்.

வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கிய கணக்கீட்டு படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டதா என்ற விவரத்தை, தேர்தல் ஆணையத்தின், voters.eci.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வதை கிளிக் செய்து, மாநிலத்தை தேர்வு செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டால், கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்