Paristamil Navigation Paristamil advert login

“மக்ரோன் தம்பதியினர் என்னைக் கொல்ல திட்டம்” : ஓவன்ஸின் சர்ச்சை!!

“மக்ரோன் தம்பதியினர் என்னைக் கொல்ல திட்டம்” : ஓவன்ஸின் சர்ச்சை!!

23 கார்த்திகை 2025 ஞாயிறு 16:33 | பார்வைகள் : 403


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோன் தன்னை கொல்ல GIGN அணியை அனுப்ப திட்டமிட்டதாக அமெரிக்க அதீத பாரம்பரியவாத இன்ஃப்ளூயன்சர் கான்டேஸ் ஓவன்ஸ் (Candace Owens) சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டியுள்ளார். 

எந்த ஆதாரமும் இல்லாத இந்த சதி கோரிக்கையில், ஒரு இஸ்ரேலியரும் அந்தக் குழுவில் இருப்பதாகவும், பத்திரிகையாளர் சேவியர் பூசார்டின் (Xavier Poussard) உயிரும் ஆபத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மக்ரோன் தம்பதி மீது பொய்யான மற்றும் அவதூறு தகவல்களைப் பரப்பியதற்காக சமீபத்தில் வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து, அவர் தன் உரையை மேலும் தீவிரப்படுத்தி வருகிறார் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தாலும், பெரும்பாலான இணைய பயனர்கள் அவற்றை பரவலாக கிண்டலாகவே எடுத்துள்ளனர். கான்டேஸ் ஓவன்ஸ் முன்பும் ஜார்ஜ் சோரோஸ், தடுப்பூசி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல பொய்யான கூற்றுகளுக்காக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். நிபுணர்கள், அவள் தொடர்ந்து புதிய சதி கதை உருவாக்குவது மக்கள் கவனத்தைப் பிடித்து தன் புகழை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே பார்க்கிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்