பிரித்தானியாவில் 13 வயது சிறுமியை கைது....
23 கார்த்திகை 2025 ஞாயிறு 08:48 | பார்வைகள் : 149
பிரித்தானியாவின் ஸ்விண்டனில் நடந்த கொலைச் சம்பவத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்விண்டனில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுமி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வில்ட்ஷயர் நகரிலுள்ள மோர்டன் பேடன் க்ளோஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த சலசலப்பு குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் பெண்ணின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட சிறுமி தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan