Paristamil Navigation Paristamil advert login

பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி கைது

 பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி கைது

23 கார்த்திகை 2025 ஞாயிறு 07:48 | பார்வைகள் : 128


ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இது குறித்து பிரேஸில் மத்திய காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது,

ஊழல், பணமதிப்பிழப்பு, சதி திட்டம் உள்ளிட்ட குற்றங்களுக்காக முன்னாள் அதிபா் பொல்சொனாரோவைக் கைது செய்தோம்.

2022 தோ்தலில் தோல்வியடைந்த பிறகு அவா் அமைதியான ஆட்சி மாற்றத்தைத் தடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதற்காக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை வரும் 25 திகதி தொடங்கும்.

சிறை செல்வதைத் தவிா்ப்பதற்காக அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக அவரை முன்கூட்டியே கைது செய்தோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2022 அக்டோபா் மாதம் நடைபெற்ற தோ்தலில் தற்போதைய அதிபா் லூலா டாசில்வா வெற்றிபெற்ற பிறகு, பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் 2023 ஜனவரி 8-ஆம் திகதி பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அதிகாரபீடங்களைத் தாக்கினா்.

இந்த விவகாரம் தொடா்பாகவே பொல்சொனாரோ மீது வழக்கு தொடரப்பட்டு, அவா் தற்போது சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளார்.

இது அரசியல் பழிவாங்கும் செயல் என்று பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்