இல்-து-பிரான்சில் வேக வரம்பு மணிக்கு 20 கிலோமீற்றர் குறைப்பு!!
22 கார்த்திகை 2025 சனி 17:14 | பார்வைகள் : 5557
நவம்பர் 22 மற்றும் 23 தேதிகளில் இல்-து-பிரான்ஸ் முழுவவதற்கும் செ ம்மஞ்சள்பனி-பனிச்சறுக்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிலிப்ப் தபரோ (Philippe Tabarot), பிராந்தியத்தின் அனைத்து சாலைகளிலும் வேக வரம்பை 20 km/h குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முக்கிய நடவடிக்கைகள்
அனைத்து சாலைகளிலும் வேக வரம்பு 20 km/h குறைப்பு
3.5 தொன்களுக்கும் அதிகமான பார ஊர்திகள் மற்றைய வாகனங்களை முந்துதல் தடை
அவசியமில்லாத பயணங்களை ஒத்திவைக்க அறிவுறுத்தல்
வானிலை முன்னறிவிப்பு
மாலை 20 மணியளவில் பரிஸ் மற்றும் அதன்புறநகர்ப் பகுதிகளால் பனிப்பொழிவு ஏற்படும்
பனி நிலத்தில் தங்காது என்றாலும், சாலைகள் வழுக்கும் நிலை (verglas) உருவாகும்
உயர் எச்சரிக்கை அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது
போக்குவரத்து சேவைகள்
RATP குளிர்கால நடவடிக்கைகளை செயல்படுத்தியது
மெட்ரோ மற்றும் RER சேவைகளிற்கு தற்போது பாதிப்பில்லை.
பேருந்து சேவைகள் விரைவாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உறைபனியைத் தடுக்க இரவு முழுவதும் வெற்று தொடருந்துகள் இயக்கப்படும்
தொடருந்து நிலையங்கள், மாடிப்படிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உப்பு மற்றும் மணல் தெளிக்கப்படும்.
Bison Futé மற்றும் Sytadin இணையதளங்கள், பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிடுவதற்கு RATP-இன் தகவல் பக்கத்தை அவதானிப்பதோடு பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தபட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan