Nutri-score கட்டாயமானதல்ல! - செனட் சபை அறிவிப்பு!!
22 கார்த்திகை 2025 சனி 12:49 | பார்வைகள் : 515
உணவுப்பொதிகளில் ஒட்டப்படும் Nutri-score கட்டாயமானதல்ல என செனட் மேற்சபை அறிவித்துள்ளது.
உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தொடர்பான தரவுகளைக் கொண்ட Nutri-score, உணவுப்பொதிகளில் ஒட்டுவது கட்டாயமான ஒன்றாக பிரான்சில் உள்ளது. அது ஐரோப்பிய தர கட்டுப்பாட்டுக்கு முரணான ஒன்றாகும். அதனை பிரான்ஸ் கடைப்பிடித்து வருவது ஐரோப்பா முழுவதும் விற்பனை செய்யப்படும் சில உணவு நிறுவனங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தது.
ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் என ஒரு தரக்கட்டுப்பாடு இருக்கும் நிலையில், பிரான்சுக்கு என தனியே ஒரு கட்டுப்பாடு இருப்பது விற்பனை சிக்கல்களை ஏற்படுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செனட் சபையில் இந்த Nutri-score தொடர்பில் ஆதரவு-எதிர் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 212 ஆதரவு வாக்குகளும், 117 எதிர் வாக்குகளும் பதிவாகியிருந்தன. எனவே, இந்த Nutri-score ஒட்டிகள் காட்சிப்படுத்தவேண்டியது கட்டாயமானது இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் இந்த Nutri-score காட்சிப்படுத்தவில்லை எனறால், அந்நிறுவனங்களின் வருமானத்தில் இருந்து 5% மேலதிக வரியை பிராண்ஸ் அறவிட்டிருந்தது. இந்த செனட் சபையின் தீர்ப்பின் பின்னர் அது நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan