ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இரு ரயில்கள் மோதி விபத்து - 57 பேர் படுகாயம்
22 கார்த்திகை 2025 சனி 10:27 | பார்வைகள் : 143
ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
செக் குடியரசின் பிளென் நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டு செஸ்கே புடெஜோவிஸ் (České Budějovice) நோக்கிப் பயணித்தது.
அந்த ரயில் தனது இலக்குக்கு அருகில் சென்றபோது, அதே ரயில் மார்க்கத்தில் வந்த மற்றொரு ரயில் நேருக்கு நேர் மோதியது.
இந்த திடீர் மோதலில் பயணிகள் பலர் படுகாயமடைந்தனர்.
மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த 57 பேரையும் வைத்தியசாலைகளில் அனுமதித்தனர்.
அவர்களுக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
விபத்தில் சேதமடைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தின் தாக்கத்தால் செஸ்கே புடெஜோவிஸ் – பிளென் இடையேயான ரயில் சேவை பல மணி நேரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
விபத்திற்கான காரணம் குறித்து செக்குடியரசி் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan