ரஷ்யாவிடமிருந்து 1,000 வீரர்களின் உடல்களை பெற்ற உக்ரைன்
22 கார்த்திகை 2025 சனி 10:27 | பார்வைகள் : 104
ரஷ்ய உக்ரைனுக்கு இடையிலாக போரில் பல ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர்.
இருப்பினும் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையில் பின்னடைவையே இரு நாடுகளும் சந்தித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து 1,000 வீரர்களின் உடல்களை பெற்றதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கும் இடையிலான சமீபத்திய பரிமாற்றமாகும்.
இந்நிலையில், புலனாய்வாளர்களும் நிபுணர்களும் விரைவில் அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு உடல்களை அடையாளம் காண்பார்கள்” என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
30 ரஷ்ய வீரர்களுக்கு ஈடாக 1,000 உக்ரேனிய வீரர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக ரஷ்ய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan