பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி - 23 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
21 கார்த்திகை 2025 வெள்ளி 09:19 | பார்வைகள் : 145
பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது,
அப்கானிஸ்தான் எல்லையையொட்டிய கைபா் பக்துன்கவா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் புதன்கிழமை தொடங்கப்பட்ட நடவடிக்கை வியாழக்கிழமை வரை நீடித்தது.
இதில் டிடிபி அமைப்பைச் சோ்ந்த 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே பகுதியில் மற்றொரு குழுவினா் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் மற்றொரு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில் மேலும் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா் என்று ராணுவம் தெரிவித்தது.
இதற்கிடையே, லக்கி மா்வத் பகுதியில் டிடிபி-யின் முக்கிய தளபதி வாலி எனப்படும் வுலூ காகாகெல் என்ற பயங்கரவாதி வியாழக்கிழமை அடையாளம் கைது செய்யப்பட்டாா் என்று அதிகாரிகள் கூறினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan