டயானாவுக்கு பரிசில் மெழுகு சிலை!!
20 கார்த்திகை 2025 வியாழன் 16:35 | பார்வைகள் : 895
பரிசில் உள்ள Musée Grévin அருங்காட்சியகத்தில் இளவரசி டயானாவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
பரிசில் உள்ள Pont de l’Alma சுரங்கத்தில் மகிழுந்து விபத்தில் டயானா உயிரிழந்து 28 ஆண்டுகள் (ஓகஸ்ட் 31, 1997) ஆகும் நிலையில், அவரது திரு உருவத்தை மெழுகில் வடித்து அதனை இன்று நவம்பர் 20, வியாழக்கிழமை முதல் காட்சிக்கு வைத்துள்ளார்கள்.
டயானாவின் புகழ்பெற்ற revenge dress எனும் 'பழிவாங்கும் உடை' அணிந்திருப்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சார்லஸிடம் இருந்து டயானா பிரிந்ததன் பின்னர் அவர் ஜூன் 29, 1994 ஆம் ஆண்டு இந்த உடையினை அணிந்துகொண்டு Serpentine Gallery நிகழ்வுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
டயானாவின் மெழுகுசிலையை இன்றுமுதல் பார்வையிட முடியும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan