Paristamil Navigation Paristamil advert login

தென் கொரியாவில் கடற்கரை பாறை சிக்கி தவித்த நூற்றுக்கணக்கானோர் மீட்பு

 தென் கொரியாவில் கடற்கரை பாறை  சிக்கி தவித்த நூற்றுக்கணக்கானோர் மீட்பு

20 கார்த்திகை 2025 வியாழன் 11:54 | பார்வைகள் : 214


தென் கொரியாவின் தென் மேற்கு கடற்கரை பகுதிக்கு அருகே குயின் ஜெனுவியா 2(Queen Jenuvia 2) என்ற 26,000 டன் எடையுள்ள படகு பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஜெஜு தீவிலிருந்து மோக்போ துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்த போது புதன்கிழமை பாறை மீது மோதி படகு விபத்தில் சிக்கியது.

படகில் 246 பயணிகள் மற்றும் 21 பணியாளர்கள் என மொத்தம் 267 பேர் இருந்த நிலையில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

படகு தரை தட்டிய போது துரதிர்ஷ்டவசமாக 3 பேருக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான காட்சிகளில், பயணிகள் உயிர் காக்கும் சட்டைகளை அணிந்து கொண்டு மீட்புக்காக காத்திருப்பது பார்க்க முடிந்தது.

தென்கொரிய பிரதமர் கிம் மின் சியோக், சாத்தியமான அனைத்து கடல்சார் மீட்பு கப்பல்கள் மற்றும் உபகரணங்களையும் மீட்புக்கு பயன்படுத்துமாறு உத்தரவிட்டார்.

விபத்தில் சிக்கிய சிவேர்ல்ட் ஃபெர்ரி என்ற நிறுவனத்தின்  குயின் ஜெனுவியா 2 கப்பல் குறைந்தது 1010 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்