அதிக கட்டணத்துடன் - நவீன வசதிகளுடன் "classe Optimum" பயணம்!!
20 கார்த்திகை 2025 வியாழன் 09:19 | பார்வைகள் : 2261
TGV சேவைகளில் நவீன வசதிகளுடன் கூடிய அதிக கட்டணத்துடன் நவீன இருக்கைகள் வழங்கப்பட உள்ளன.
"classe Optimum" என பெயரிடப்பட்ட இந்த இருக்கைகள் வரும் ஜனவரி 8, 2026 முதல் சேவைக்கு வருகிறது. அதன் பயணச் சிட்டை விற்பனை நேற்று நவம்பர் 19, புதன்கிழமை ஆரம்பித்திருந்தது. விமானத்தில் உள்ள business இருக்கைகள் போன்று ஆடம்பரமான இருக்கைகள், நவீன வசதிகள் மற்றும் சேவைகளைக் கொண்ட உல்லாச பயணத்தை அனுபவிக்கக்கூடியவாறு அமைந்த இருக்கைகளை TGV தொடருந்துகளில் பெற முடியும்.
முதற்கட்டமாக பரிசில் இருந்து லியோன் நகருக்கு இந்த தொடருந்து பயணிக்க உள்ளது. மிகவிரைவில் அனைத்து நகரங்களுக்குமான சேவைகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கட்டணம்??!
பரிசில் இருந்து லியோனுக்குச் செல்ல,
இரண்டாம் வகுப்பு கட்டணம் €64 யூரோக்களாக இருக்க, முதல் வகுப்பு கட்டணம் €86 யூரோக்களாக உள்ளது.
அதிலே "பிஸினஸ் க்ளாஸ்" கட்டணம் €160 யூரோக்களாக உள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள classe Optimum கட்டணமாக €180 யூரோக்கள் அறவிடப்பட உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan