Paristamil Navigation Paristamil advert login

நெல் கிடங்குகளுக்கான நிதி ரூ.309 கோடி எங்கே சென்றது?: அண்ணாமலை

நெல் கிடங்குகளுக்கான நிதி ரூ.309 கோடி எங்கே சென்றது?: அண்ணாமலை

20 கார்த்திகை 2025 வியாழன் 14:13 | பார்வைகள் : 109


நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் செய்வதற்கு, தாமதம் ஏற்படுத்தப்படுகிறது. நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளை விட துவங்கிய நிலையில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக, ஏமாற்று வேலை நடத்தி கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

கடந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில், சேமிப்பு கிடங்குகள், உணவு கிடங்குகள் அமைக்க, 309 கோடி ரூபாய் செலவிட்டதாக, தி.மு.க., அரசு கூறியிருக்கிறது. ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது, 309 கோடி ரூபாய் நிதி?

தி.மு.க., அரசின் ஊழலாலும், தவறுகளாலும் தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் தானே தவிர, தி.மு.க.,வின் கடித நாடகம் அல்ல.

வர்த்தக‌ விளம்பரங்கள்