கனடாவை புலம்பெயர்ந்தோர்களில் திறன்மிக்கவர்கள்அதிகம் - ஆய்வு முடிவுகள்
19 கார்த்திகை 2025 புதன் 19:11 | பார்வைகள் : 3500
கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில், அதிகம் கற்ற, திறன் மிக்க பணியாளர்களே கனடாவை விட்டு சீக்கிரமாக வெளியேறுவதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கனடா வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிகக் குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க சமீபத்தில் முடிவு செய்துள்ளது பலரும் அறிந்ததே.
2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில், ஆண்டுக்கு 370,000 பேருக்கு மட்டுமே தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வழங்கப்பட உள்ளது.
2026இல் 516,000 பேருக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க இருப்பதாக புலம்பெயர்தல் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 3
ஆனால், அதை 385,000ஆக அரசு குறைத்துள்ளது. இந்த மாற்றம், தற்காலிக குடியிருப்பு அனுமதிகளைக் குறைப்பதன்மூலம் கனடாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதையே காட்டுவதாக கருதப்படுகிறது.
விடயம் என்னவென்றால், எவ்வளவு கற்றும், பணி அனுபவம் இருந்தும், தங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால், நன்கு கற்ற புலம்பெயர்ந்தோர் கனடாவை விட்டு வெளியேறிவருவதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
Institute for Canadian Citizenship (ICC) என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள், கனடாவுக்கு வந்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்களில் ஐந்தில் ஒருவர், 25 ஆண்டுகளுக்குள் கனடாவை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கின்றன.
குறிப்பாக, அதிகம் கற்றவர்கள், அதாவது, முனைவர் பட்டம் பெற்றவர்கள், இளங்கலை பட்டம் பெற்றவர்களைவிட வெகுசீக்கிரமாக கனடாவை விட்டு வெளியேறுகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.
ICC நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான டேனியல் (Daniel Bernhard) கூறும்போது, புலம்பெயர்ந்தோரின் திறமை, தகுதி குறித்த சந்தேகங்களால் அவர்களால் கனடாவில் சரியான அங்கீகாரம் பெற இயலாததால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ஆனால், அது கனடாவின் பொருளாதார சவால்களை கனடா எதிர்கொள்வதை பாதிக்கும் என்கிறார்.
தங்கள் சொந்த நாடுகளில், ரயில்வே, கட்டுமானம் முதலான பல முக்கியத் துறைகளில் நம்மைவிட சிறந்துவிளங்கியவர்கள் இந்த திறன்மிகு புலம்பெயர்ந்தோர்.
அவர்களால்தான் நமது பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவமுடியும், ஆக, அவர்களை இழந்தோமானால், கனடா வெற்றிபெற உதவியாக இருக்கும் நிபுணத்துவத்தை நாம் இழந்துவிடுவோம் என்கிறார் டேனியல்.
எனவே, கனடா அரசு, திறன்மிகு புலம்பெயர்ந்தோரை தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கூறும் டேனியல், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கனடாவுக்கு வருவோரை துரத்தி அடிப்பதற்கு பதிலாக, மனித வள அமைப்பாக மாறுவதைக் காண தான் ஆவலாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan