பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன் வெட்டிக்கொலை
19 கார்த்திகை 2025 புதன் 12:14 | பார்வைகள் : 2604
பிரான்ஸில் இருந்து சென்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் நள்ளிரவு வேளையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூதாவளை வீதி கரணவாய் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தூதாவளை கரணவாய் கரவெட்டியை சேர்ந்த 29 வயதான ராஜகுலேந்திரன் பிருந்தன் என்ற இளைஞனே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் இன்று நள்ளிரவு 12:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது தூதாவளை வீதியில் வழிமறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெளியே சென்ற மகனைக் காணவில்லையென தாயும், தந்தையும் தேடிச் சென்ற போது வீதியில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக தெரியவந்துள்ளது.
பெற்றோர்களால் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அவர் உயிரிழ்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
பிரான்ஸில் பெண் ஒருவரை பதிவு திருமணம் செய்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்ப தயாராக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan