Paristamil Navigation Paristamil advert login

லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் - 13 பேர் பலி

 லெபனான் மீது  இஸ்ரேல்  தீவிர தாக்குதல் - 13 பேர் பலி

19 கார்த்திகை 2025 புதன் 08:58 | பார்வைகள் : 281


இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பாலஸ்தீனிய அகதிகள் முகாம் அருகே சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

இந்த இடம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிடவும் நடத்தவும் ஹமாஸால் பயன்படுத்தப்பட்டது என்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கூறி ஹமாஸ் நிராகரித்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்குப் பின்னர், லெபனானில் உள்ள நபர்கள் மற்றும் இடங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பெரும்பாலான தாக்குதல்கள் ஹிஸ்புல்லாவை இலக்காகக் கொண்டிருந்தாலும், இஸ்ரேல் , ஹமாஸ் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்