Paristamil Navigation Paristamil advert login

வருகிறது பனிப்பொழிவு!!

வருகிறது பனிப்பொழிவு!!

18 கார்த்திகை 2025 செவ்வாய் 17:51 | பார்வைகள் : 1332


நாளை நவம்பர் 19, புதன்கிழமை பிரான்சில் பல மாகாணங்களில் பனிப்பொழிவு பதிவாகலாம் என Météo France  அறிவித்துள்ளது.

தொப்பிகளையும், கழுத்து அணிகளையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நாள் வந்துள்ளது. தற்போது உள்ள பருவகாலத்தை விட மிக அதிகமாக குளிர் நிலவுவதாக தெரிவித்த Météo France, மலைகள் அமைந்துள்ள மாகாணங்களில் பனிப்பொழிவு பதிவாகும் என எச்சரித்துள்ளது. 

இல்-து-பிரான்சை பொறுத்தவரை, பனிப்பொழிவுடன் மழைச்சாரலும் பதிவாகும் என்பதால், அது பெரியளவில் தாக்கத்தை செலுத்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிரான்சின் மத்திய மற்றும் ஆல்ப்ஸ், Pyrenees   பகுதிகள், ஆங்கில கடற்கரையை அண்டிய பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, வரும் வாரத்தில் மேலும் பல பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்