Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் போர் கப்பலால் கரீபியன் கடலில் போர் பதற்றம்

அமெரிக்காவின் போர் கப்பலால்  கரீபியன் கடலில் போர் பதற்றம்

17 கார்த்திகை 2025 திங்கள் 18:28 | பார்வைகள் : 245


அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு விமானம் தாங்கிக் கப்பல் கரீபியன் கடலை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 12,000 துருப்புக்களையும் , விமானங்களையும் உள்ளடக்கிய இந்த கப்பல் கரீபியன் கடற்பகுதிக்கு வருகை தந்துள்ளதன் மூலம் அமெரிக்காவின் பிரசன்னம் அப்பகுதியில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபரேஷன் சதர்ன் ஸ்பியர்’ இன் ஒரு பகுதியாக குறித்த கப்பல் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது வெனிசுலாவில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கையாக விவரிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் படகுகள் மீதான சமீபத்திய தாக்குதல்களை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

வெளிப்படையாக போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையாக காண்பிக்கப்பட்டாலும் மறைமுகமாக ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் பிராந்தியத் தலைவர்கள் மற்றும் மனித உரிமை அதிகாரிகளிடமிருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பிராந்திய மோதலை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்