Paristamil Navigation Paristamil advert login

€30.4 பில்லியன் முதலீடு... இன்று ஆரம்பமாகிறது Choose France மாநாடு!

€30.4 பில்லியன் முதலீடு... இன்று ஆரம்பமாகிறது Choose France மாநாடு!

17 கார்த்திகை 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 1855


சர்வதேச நிறுவனங்களை பிரான்ஸ் தொழில் ஆரம்பிக்க அழைக்கும் Choose France மாநாடு இன்று நவம்பர் 17, திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

மொத்தமாக 151 திட்டங்களில் €30.4 பில்லியன் யூரோக்கள் முதலீடை இந்த மாநாடு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. இதில்

"ஆற்றல், பசுமைத் தொழில்கள், சுற்றுச்சூழல், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், ரசாயனங்கள், போக்குவரத்து, வேளாண் உணவு, நுகர்வோர் பொருட்கள், விண்வெளி மற்றும் சுற்றுலா"

என பல துறைகளில் முதலீடு இடம்பெற உள்ளன. அத்தோடு €9.2 பில்லியன் யூரோக்களில் முற்று முழுதாக புதிய ஒன்பது திட்டங்களும் கொண்டுவரப்பட உள்ளன.

அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த முதலீடு மேலும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பிரான்சின் Urgo நிறுவனம், வரும் 2029 ஆம் ஆண்டில் €60 மில்லியன் யூரோக்கள் முதலீட்டில் Loire மாகாணத்தில் பெரும் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிக்க உள்ளது. இதனால் மேலும் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Safran நிறுவனம் €450 மில்லியன் யூரோக்கள் முதலீட்டில் Ain மாவட்டத்தில் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்