ரஷ்யாவின் எண்ணெய் துறைமுக நகரை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்
16 கார்த்திகை 2025 ஞாயிறு 10:04 | பார்வைகள் : 194
ரஷ்யாவின் எண்ணெய் துறைமுக நகரை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான மிக நீண்ட போர் நடவடிக்கையின் ஒரு அங்கமாக ரஷ்யாவின் முக்கிய துறைமுக நகரான நோவோரோஸ்யிஸ்க் மீது உக்ரைன் வான்வழித் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நோவோரோஸ்யிஸ்க் நகரம் ரஷ்யாவின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நோவோரோஸ்யிஸ்க் நகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், ரஷ்யாவின் முக்கியமான உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டு இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
அவற்றில் குறிப்பாக ரஷ்யாவின் துறைமுகம், எண்ணெய் டெர்மினல் மற்றும் ரஷ்யாவின் S400 வான் பாதுகாப்பு அமைப்புகள் சேதமடைந்து இருப்பதாக உக்ரைன் ராணுவம் குறிப்பிட்டு கூறியுள்ளது.
உக்ரைன் இந்த தாக்குதல் ரஷ்யாவின் நேற்றைய தாக்குதலுக்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது.
நேற்று உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலில் ரஷ்யா 430 ட்ரோன்கள் மற்றும் 18 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan