பரிஸ் மொன்பர்நாஸ் ரயில் நிலையத்தில் பதட்டம்: கத்தி காட்டிய நபருக்கு காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு!!
14 கார்த்திகை 2025 வெள்ளி 21:52 | பார்வைகள் : 3611
பரிஸ் மொன்பர்நாஸ் (Montparnasse) ரயில் நிலையத்தில், குடும்ப வன்முறைக்காக முன்பு அறியப்பட்ட 44 வயதான நபர், மிரட்டும் வகையில் கத்தியை காட்டியதால், நவம்பர் 14 வெள்ளிக்கிழமை மதியம் காவல் துறையினர் துப்பாக்கி பிரயோகம் செய்து அவரை காயப்படுத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் தீவிர காயம் அடைந்துள்ளார்; மேலும் 53 வயதான ஒரு பயணி தற்செயலாக காயமடைந்துள்ளார். Rennes நகரில் இருந்து வந்த ரயிலில் அவரை கைது செய்ய போலீசார் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் தனது முன்னாள் மனைவியை மீண்டும் மிரட்டப் போவதாக கூறியிருந்தார் மற்றும் செப்டம்பரில் குடும்ப வன்முறை மற்றும் மிரட்டலுக்காக தண்டிக்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தின் போது பயணிகள் பீதி அடைந்து ஓடினர்; ரயில் நிலைய கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சாட்சிகள் துப்பாக்கிச் சத்தங்களையும் போலீசார் கூட்டத்துக்குள் விரைந்து செல்வதையும் விவரித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டின் பின்னர் இரண்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன: ஒன்று கத்தி காட்டி மிரட்டிய நபரின் தாக்குதல் முயற்சியைப் பற்றி, மற்றொன்று காவல் துறையினரின் துப்பாக்கி பயன்பாட்டை ஆய்வு செய்ய IGPN–க்கு ஒப்படைக்கப்பட்டது. ரயில் போக்குவரத்து லேசாக பாதிக்கப்பட்டதாக SNCF தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan