கூட்டணியில் நாங்கள் முதன்மையானவர்கள் கிடையாது: ஆர்ஜேடி மீது பழி போடும் காங்.
15 கார்த்திகை 2025 சனி 09:06 | பார்வைகள் : 1064
கூட்டணியில் நாங்கள் முதன்மையானவர்கள் கிடையாது என்று பீஹார் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கருத்து கூறி உள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறது. நம்பிக்கை அளித்து ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி, நிதிஷ்குமார் உள்ளிட்ட அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், பீஹார் தோல்விக்கு யார் காரணம் என்ற பேச்சுகளும் இண்டி கூட்டணியில் எழ ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறி உள்ளதாவது;
தோல்விக்கு என்ன காரணம் என்பதை கட்சித் தலைமை ஆய்வு செய்ய வேண்டும். எங்கள் கூட்டணியின் முதன்மையான கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் தான். நாங்கள் இல்லை. எனவே ஆர்ஜேடியும் தனது செயல்பாடுகளை கவனமாக ஆராய வேண்டும்.
தோல்விக்கு காரணம் என்ன என்பதை ஆராய கட்சிக்கு முழுமையான பொறுப்பு இருக்கிறது. இருப்பினும் கூட்டணியில் நாங்கள் முதன்மையானவர்கள் அல்ல. தேர்தல் பிரசாரத்தின் போது என்னை கட்சி அழைக்கவே இல்லை. எனவே தனிப்பட்ட முறையில் என்னால வேறு எதுவும் கூறமுடியாது.
தேர்தலுக்கு முன்பாக இது போன்ற வெகுமதிகள் (மகளிருக்கு ரூ.10,000 தந்தது)வழங்கும் போக்குகள் உள்ளன. எது, எப்படி இருந்தாலும் முடிவுகளை விரிவாக பகுப்பாய்வு செய்வோம்.
இவ்வாறு சசிதரூர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan