சிறுவர்களை பிரான்சுக்குக் கடத்தி வந்த குற்றவியல் வலையமைப்பு தகர்ப்பு!!
14 கார்த்திகை 2025 வெள்ளி 15:16 | பார்வைகள் : 4286
ஸ்பெயின் காவல்துறையினர், மொராக்கோவிலிருந்து கனரி (Grande Canarie) தீவுகளுக்கு வந்த சிறுவர்களை பிரான்சுக்குக் கடத்திய குற்றவியல் வலையமைப்பை கொண்ட 11 பேரை கைது செய்துள்ளது.
இந்த அமைப்பு சிறார்களை மாற்றுவதற்கான தளவாட வளங்களை மொராக்கோவிலும் மற்றும் போலி ஆவணங்களை உருவாக்கும் தொடர்புகளை Côte d’Ivoireஇலும் வைத்திருந்தது. 2024 நவம்பர் முதல் 2025 மே மாதம் வரை லான்சரோட்டே (l’île de Lanzarote) மற்றும் கிரான் கனாரியா (Grande Canarie) ஆகிய சிறுவர் மையங்களில் இருந்து 14 சிறுவர்கள் காணாமல் போனது விசாரணைக்கு காரணமானது. ஒரு மொரிஷியனியன் அனுமதியின்றி மூன்று சிறுவர்களை விமானத்தில் அழைத்து செல்ல முயன்றதும் காவல்துறையினரால் தடுக்கப்பட்டது.
லான்சரோட்டேவில் உள்ள இரண்டு வீடுகளில் திடீர் சோதனையில் ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பணம் போன்றவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 11 பேரில் நால்வர் குற்றவியல் அமைப்பில் உறுப்பினராக இருப்பது, கள்ள ஆவண தயாரிப்பு, மனிதக் கடத்தல் மற்றும் குழந்தை அசிங்கக் காட்சிப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக முன்-எச்சரிக்கை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன அனைத்து சிறுவர்களும் கண்டுபிடிக்கப்படும் வரை விசாரணை தொடரும். ஐரோப்பாவுக்கான முக்கிய குடியேற்ற நுழைவாயில்களில் ஒன்றான கனரி தீவுகள் மூலமாக கடந்த ஆண்டு 47,000 பேர் புலம்பெயர்ந்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan