Paristamil Navigation Paristamil advert login

பரிசில் அதிரடியாக 11 பேர் கைது!!

பரிசில் அதிரடியாக 11 பேர் கைது!!

13 கார்த்திகை 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 2608


தலைநகர் பரிசில் 11 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசுகளை வெடித்து சட்ட ஒழுங்கை சீர்குலைத்தார்கள் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். வீடியோ பாடல் ஒன்றின் படப்பிடிப்பில் ஈடுபட்ட அவர்கள், பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் இல்லாமல், சட்ட ஒழுங்கை சீர்குலைப்பது போன்று பட்டாசுகளை வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Rue Érard வீதியை அவர்கள் முழுவதுமாக முடக்கியுள்ளனர். படக்குழு, பாடகர் என மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்