X உட்பட சில சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுவதை மறுக்காத மக்ரோன்!!
12 கார்த்திகை 2025 புதன் 15:01 | பார்வைகள் : 2613
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், துலூசில் (Toulouse) நடந்த “சமூக வலைத்தளங்களால் சோதிக்கப்படும் ஜனநாயகம்” என்ற விவாதத்தின் போது, சில சமூக வலைத்தளங்களில் இருந்து, குறிப்பாக X (முன்பு ட்விட்டர்) இலிருந்து விலகும் வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
“முதலில் நம்மால் முடிந்த அளவு கட்டுப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை அந்த வலைத்தளங்களின் உள்ளே இருந்து பெற முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு தான், அவற்றிலிருந்து வெளியேறுவது போன்ற கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கலாம்.” என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் சமூக வலைத்தளங்கள் பிரான்ஸ் ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தும் அபாயங்களை எச்சரித்து, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சில தெளிவான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மக்ரோன் சமூக வலைத்தளங்களை முகமூடி அணிந்த அரங்கம் போல ஒப்பிட்டுள்ளார், அங்கே யார் அதிகமாகக் கத்துகிறார்களோ அவர்கள் தான் சரி என தோன்றுகிறது என கூறியுள்ளார். பின்னர், அவர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் ENAC பள்ளியில் சந்தித்து, CNES மையத்திற்கும் செல்ல திட்டமிட்டிருந்தார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan