Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியா - ஆஸ்திரேலியா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

 இந்தோனேசியா - ஆஸ்திரேலியா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

12 கார்த்திகை 2025 புதன் 12:44 | பார்வைகள் : 759


இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக அவுஸ்திரேலியா செல்லவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்ததாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் ஜனவரியில் இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என அறிவித்திருந்தார்.

இதற்கமைய இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அந்த அச்சுறுத்தல்களைச் சமாளிக்க தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதை ஆலோசிக்கவும் பரிசீலிக்கவும் வாய்ப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்