SHEIN: சார்ள்-து-கோல் விமான நிலையத்தில் தீவிர சோதனை!!
6 கார்த்திகை 2025 வியாழன் 18:37 | பார்வைகள் : 4073
பிரான்சில் SHEIN மின்னணு வணிக தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சார்ள்-து-கோல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. 200,000-க்கும் மேற்பட்ட பொதிகள் சுங்கத் துறையினரால் சோதனை செய்யப்படும் என பொதுமக்கள் நியத்திற்கான அமைச்சர் அமெலி-து-மொன்சலான் ( Amélie de Montchalin) அறிவித்தார்.
முக்கிய விவரங்கள்:
கடந்த 24 மணி நேரத்தில் வந்த அனைத்து பொதிகளும் தடுக்கப்பட்டுள்ளன
200,000 பொதிகள் திறக்கப்படும்
மூன்று வழக்குகளுக்கு ஆதாரம் சேகரிக்கப்படும்
கண்டறியப்பட்ட முக்கிய குறைபாடுகள்:
அனுமதி இல்லாத ஒப்பனைப் பொருட்கள்
குழந்தைகளுக்கு ஆபத்தான விளையாட்டுப் பொருட்கள்
கள்ளப் பொருட்கள்
குறைபாடுள்ள மின்னணு சாதனங்கள்
அரசின் நடவடிக்கைகள்:
SHEIN இணையதளம் நிறுத்தப்பட்டது
ஐரோப்பிய ஆணையத்திற்கு முறையான மனு கையளிக்கப்பட்டது
போட்டிஇ நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் மோசடி கட்டுப்பாட்டுக்கான பொது இயக்குநரகமான DGCCRF (Direction générale de la concurrence, de la consommation et de la répression des fraudes), சுங்கத் துறை மற்றும் விமானப் போக்குவரத்து ஜோந்தாமெரியான GTA (gendarmerie des transports aériens) இணைந்த தீவிர சோதனை நடவடிக்கை
பாதிப்புகள்:
பிரெஞ்சு மக்கள் SHEIN இணையதளத்தில் வாங்கிய பொருட்களின் விநியோகம் தாமதமாகும் சாத்தியம் உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan