நவம்பர் 13 தாக்குதல்! - பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி! பரிசில் ஏற்பாடு!!
6 கார்த்திகை 2025 வியாழன் 15:54 | பார்வைகள் : 1379
நவம்பர் 13 தாக்குதல் இடம்பெற்று பத்து ஆண்டுகள் ஆன நிலையில், வரும் 13 ஆம் திகதி பரிசில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Place de la République பகுதியில் கொல்லப்பட்ட அனைவருக்கும் பொதுச்சுடர், மெழுவர்த்தி மலர்மாலைகள் போன்றவற்றுடன் மெளன அஞ்சலி நிகழ்வும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. பரிஸ் மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ஆறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று 130 பேர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் 7 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டிருந்தனர். 700 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
அதேவேளை, Place Saint-Gervais பகுதியில் தற்காலிக நினைவுத்தூபி ஒன்றும் திறந்துவைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan