Paristamil Navigation Paristamil advert login

இலங்கை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

இலங்கை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

6 கார்த்திகை 2025 வியாழன் 13:21 | பார்வைகள் : 172


இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,923,502 ஆகும்.

அவர்களில், 431,235 பேர் இந்தியாவிலிருந்தும், 177,167 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 138,061 பேர் ரஷ்யாவிலிருந்தும், 119,415 பேர் ஜேர்மனியிலிருந்தும், 113,619 பேர் சீனாவிலிருந்தும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 32,815 ஆகும்.

இலங்கையின் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 20 இலட்சம் என்ற எல்லையை 4 சந்தர்ப்பங்களில் கடந்துள்ளது.

2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இந்த எல்லையை கடந்திருந்தது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்