தயாரிப்பாளராககும் நடிகர் ராணா !
6 கார்த்திகை 2025 வியாழன் 13:02 | பார்வைகள் : 178
கடந்த வருடம் வெளியான ‘வேட்டையன்’ படத்தில் வில்லனாக ராணா நடித்திருந்தார். அதன் பிறகு அவரது நடிப்பில் இப்போது வரை படம் எதுவும் வெளியாகவில்லை. அதே சமயம் தற்போது தயாரிப்பாளராக பல படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார்.
தற்போது ராணா ஒரு தயாரிப்பாளராக மாறி துல்கர் சல்மான் நடித்துள்ள ‘காந்தா’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிலையில் அடுத்ததாக ஹிந்தியில் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் ராணா. இதில் மனோஜ் பாஜ்பாய் கதையின் நாயகனாக நடிக்கிறார். புக்கர் விருது பெற்ற அரவிந்த் அடிகா எழுதிய ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த படத்தை பென் ரக்கி என்பவர் இயக்குகிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan