Paristamil Navigation Paristamil advert login

டில்லி காற்று மாசுக்கு தீர்வு: உதவ தயார் என்கிறது சீனா

டில்லி காற்று மாசுக்கு தீர்வு: உதவ தயார் என்கிறது சீனா

6 கார்த்திகை 2025 வியாழன் 12:54 | பார்வைகள் : 100


காற்று மாசால் டில்லி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன துாதரகத்தின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் யு ஜிங், இதுபோன்று பிரச்னையை எதிர்கொண்டு சீனா மீண்டதாகவும், அது தொடர்பான அனுபவத்தை பகிர தயார் என்றும் தெரிவித்து உள்ளார்.

தலைநகர் டில்லி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் காற்று மாசு மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில், டில்லியில் உள்ள இந்தியாவுக்கான சீன துாதரகத்தின் செய்தி தொடர்பாளர் யு ஜிங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'சீனாவின் பல நகரங்களும் இதுபோன்ற பிரச்னையை சந்தித்தன. அதிலிருந்து தற்போது மீண்டுள்ளோம். தெளிவான நீல வானத்தை காண்கிறோம்.


டில்லி காற்று மாசு பிரச்னையை தீர்க்க எங்கள் அனுபவங்களை பகிர்ந்து உதவ தயார்' என குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் பீஜிங், சியான், டயாஞ்சின், சாங்சாய் உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் சில ஆண்டுகளுக்கு முன் மோசமாக இருந்தது.

நகரின் பசுமை பரப்பை அதிகரித்தது, தொழிற்சாலைகளை மூடுதல், பொது போக்குவரத்தை மேம்படுத்துதல், புகையை கட்டுப்படுத்துதல் போன்ற பலகட்ட நடவடிக்கைகள் மூலம் காற்று மாசை குறைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்