Paristamil Navigation Paristamil advert login

குடியேற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்கள் சிக்கலில்! அரசுசாரா நிறுவனத்தின் கண்டனம்!!

குடியேற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்கள் சிக்கலில்! அரசுசாரா நிறுவனத்தின் கண்டனம்!!

5 கார்த்திகை 2025 புதன் 14:54 | பார்வைகள் : 3108


அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International), பிரான்சின் தங்கும் அனுமதி (titre de séjour) புதுப்பிப்பு முறைமையை “சீர்கேடானது” என்றும், அது வெளிநாட்டு தொழிலாளர்களை “முறையற்ற நிலைக்கு தள்ளி, அவர்களின் வாழ்க்கையை சிதைக்கிறது” என்றும் கண்டித்துள்ளது.

நிர்வாக தாமதங்கள், கடுமையான சட்டங்கள் மற்றும் நீண்ட நிர்வாக நடைமுறைகள் காரணமாக பலர் தங்களின் அனுமதி அட்டைகள் காலாவதியாகும் முன்பே சட்டவிரோதர்களாக மாறுகிறார்கள். இதனால் அவர்கள் வேலை, வருமானம், சில நேரங்களில் வீட்டையும் இழக்கின்றனர். இந்த நிலையின்மை அரசால் உருவாக்கப்பட்டதே, மேலும் புதிய குடியேற்ற சட்டம் அதை மேலும் மோசமாக்குகிறது என அம்னஸ்டி கூறியுள்ளது.

இந்த முறைமையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்கள் முதலாளிகளையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றனர், ஏனெனில் புதுப்பிப்புக்கு தேவையான ஆவணங்களை முதலாளியே வழங்க வேண்டும்.

சிலர் சம்பள மோசடி, வேலை இட வன்முறை மற்றும் பாகுபாடுகளையும் சந்திக்கிறார்கள். இதனை மாற்ற, அம்னஸ்டி அமைப்பு குறைந்தது நான்கு ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒரே வகை வேலை–தங்கும் அனுமதி அட்டையை உருவாக்கவும், தேவையான ஆவணங்களை பணியாளர்களே நேரடியாக வழங்கும் வகையில் சட்டம் திருத்தப்படவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும், நிர்வாகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அமைப்பு விளக்கியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்