எலான் மஸ்க்கின் 1 ட்ரில்லியன் டொலர் சம்பளம் கனவு தகர்ந்தது
4 கார்த்திகை 2025 செவ்வாய் 16:01 | பார்வைகள் : 387
டெஸ்லா நிறுவனத்தின் ஏழாவது மிகப்பெரிய முதலீட்டாளர் எலான் மஸ்க்கின் 1 ட்ரில்லியன் டொலர் சம்பளம் என்ற கனவை தடாலடியாக தகர்த்துள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
நோர்வேயை சேர்ந்த அந்த முதலீட்டாளர் எலான் மஸ்க்கின் கனவு சம்பளத்திற்கு எதிராக வாக்களிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். உண்மையில் நோர்வே அரசாங்கமே டெஸ்லாவின் ஏழாவது மிகப்பெரிய முதலீட்டாளர்.
உலக அளவில் முதலீடு செய்வதற்கு என ஒரு பெருந்தொகையை ஒதுக்கியுள்ள நோர்வே அரசாங்கம், டெஸ்லாவிலும் முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில், மஸ்க்கின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் உருவாக்கப்பட்ட டெஸ்லாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பாராட்டிய அந்த நிதியம்,
1 ட்ரில்லியன் சம்பளம் தொடர்பில் எதிராக வாக்களிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், 1 ட்ரில்லியன் டொலர் சம்பளம் என்பது ஏற்புடையதாக இல்லை என்றும், இந்த விவகாரம் குறித்து டெஸ்லா நிர்வாகத்துடன் ஆக்கபூர்வமான உரையாடலை தொடர்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நோர்வே நிதியம் சுமார் 17 பில்லியன் டொலர் தொகையை டெஸ்லாவில் முதலீடு செய்துள்ளது. எலான் மஸ்க் முன்னெடுக்கும் வருடாந்திர பங்குதாரர் கூட்டம் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கும் நிலையிலேயே, எதிர்த்து வாக்களிக்க இருப்பதாக எச்சரித்துள்ளது.
வியாழக்கிழமை நடக்கும் அந்த கூட்டத்தில் எலான் மஸ்க்கின் 1 ட்ரில்லியன் டொலர் சம்பளம் தொடர்பான வாக்கெடுக்கும் நடக்க உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மஸ்க் டெஸ்லாவின் மதிப்பை சுமார் 1 ட்ரில்லியன் டொலரில் இருந்து 8.5 ட்ரில்லியன் டொலராக உயர்த்தினால்,
டெஸ்லாவில் 16 முதல் 25 சதவீதத்திற்கும் மேல் அவருக்கு பங்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் அவரது சொத்து மதிப்பு 2 ட்ரில்லியன் டொலருக்கு மேல் அதிகரிக்கும்.
ஆனால், 1 ட்ரில்லியன் சம்பளம் இல்லை என்றால் டெஸ்லாவில் இருந்து வெளியேற இருப்பதாக மஸ்க் மிரட்டல் விடுத்து வருகிறார். டெஸ்லாவில் தலைமை நிர்வாக அதிகாரியாக மஸ்க் நீடிக்க,
இந்த வாக்கெடுப்பு முக்கியம் என்றும் அதன் தலைவர் ராபின் டென்ஹோம் வாதிட்டு வருகிறார். முன்னதாக எலான் மஸ்க்கின் 56 பில்லியன் டொலர் சம்பளம் என்ற கனவை நோர்வேயின் எண்ணெய் நிதியம் கடந்த ஆண்டு நிராகரித்தது.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஜூன் மாதத்தில் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் டிசம்பரில் டெலாவேரில் உள்ள நீதிமன்றத்தால் இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan