சுகாதார போக்குவரத்து மோசடி - 5 ஓட்டுநர்கள் நீதிமன்றத்தில்
4 கார்த்திகை 2025 செவ்வாய் 09:53 | பார்வைகள் : 2840
முக்கிய விவரங்கள்:
திகதி: நவம்பர் 4, 2025
இடம்: Évry திருத்த நீதிமன்றம் (tribunal correctionnel - Essonne)
குற்றச்சாட்டு: சுகாதார போக்குவரத்து மோசடி
தொகை: 612,000 யூரோ
மோசடி முறை:
நவம்பர் 4, 2025 அன்று Évry திருத்த நீதிமன்றத்தில் ஐந்து கட்டண வாகன(Taxi) ஓட்டுநர்கள் நீண்டகால நோயாளியொருவருடன் இணைந்து Assurance-maladie-இடமிருந்து 612,000 யூரோக்களை போலிச் சுகாதாரப் போக்குவரத்துச் சீட்டுகள் மூலம் கையகப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். இந்த மோசடி 8 ஆண்டுகளாக நீடித்துள்ளது. இதில் 35 வயது நீண்டகால நோயாளி கட்டண வாகன ஓட்டுநர்களுக்கு வெற்றுச் சீட்டுகளை வழங்க, அவர்கள் இல்லாத பயணங்களைப் கட்டணச் சீட்டுக்கள் தயார் செய்து, தேசிய மருத்துவக் காப்பீடானCPAM-இடமிருந்து பணம் வசூலித்துள்ளனர்.காவல் துறையின் விசாரணையில் 3,024 போலி மருத்துவ பரிந்துரைகள் கண்டறியப்பட்டன,
புள்ளிவிவரங்கள்:
3,024 போலி மருத்துவ பரிந்துரைகள்
208,800 யூரோ மோசடி முயற்சி
7,142 யூரோக்கள் கையகப்படுத்தப்பட்டன
கைபற்றப்பட்ட சொத்துகள்:
6,600 யூரோக்கள் பணம்
ஒரு உந்துருளி மற்றும் ஒரு மகிழுந்து
3 Taxi உரிமங்கள்
குற்றத்தில் ஈடுபாடு:
5 கட்டண வாகன ஓட்டுநர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். . ஒரு ஓட்டுநர் 750 போலிப் பயணங்களும், மற்றொருவர் 550 பயணங்களும், (போலிப் பயணங்கள்) செய்ததாக மருத்துவக் காப்பீட்டிடம் கணக்குக் காட்டி உள்ளனர்.
இவரகளின் குற்றங்களிற்கான தீர்ப்புகள் வழங்கப்பட உள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan