செயற்கை ஒளிச்சேர்க்கை- ஜேர்மன் ஆய்வாளர்களின் ஆய்வு
27 புரட்டாசி 2025 சனி 15:23 | பார்வைகள் : 4967
இந்த புவி வெப்பமயமாதலைக் குறைக்க, சமூக ஆர்வலர்கள் ஒருபக்கம் குரல் கொடுத்துக்கொண்டிருக்க, ஆய்வாளர்கள் பலர் நடைமுறையில் அதை சாத்தியமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்த புவி வெப்பமயமாதலுக்கு கார்பன் டை ஆக்சைடு என்னும் வாயுவும் ஒரு காரணமாகும்.
பொதுவாக மனிதன் மற்றும் விலங்குகள் சுவாசிக்கும்போதும், தாவரங்கள் மட்கும்போதும் இந்த கார்பன் டை ஆக்சைடு வெளியாகும்.
அந்த கார்பன் டை ஆக்சைடை, தாவரங்கள் எடுத்து உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தும். அந்த நிகழ்வே ஒளிச்சேர்க்கை என அழைக்கப்படுகிறது.
ஆனால், மனிதன் பயன்படுத்தும் வாகனங்கள், இயந்திரங்கள், ஆடம்பர பொருட்கள் ஆகியவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு, தாவரங்களால் முழுமையாக பயன்படுத்தப்படும் அளவை தாண்டிவிட்டது.
கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்த, முதலில் தாவரங்கள் வேண்டும். அவற்றைத்தான் நாம் அழித்து கட்டிடங்களாக்கிவருகிறோமே. அப்புறம் எவ்வளவு கார்பன் டை ஆக்சைடை இருக்கிற மரங்களால் பயன்படுத்தமுடியும்.
ஆகவே, இந்த கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்திலிருந்து அகற்ற ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
அவ்வகையில், ஜேர்மன் ஆய்வாளரான Kira Rehfeld, செயற்கை ஒளிச்சேர்க்கை என்னும் நிகழ்வின் மூலம் இந்த கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்திலிருந்து அகற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஜேர்மனியின் Tübingen நகரில் உள்ள Geo and Environmental Center என்னும் மையத்தில், Kira தலைமையிலான ஆய்வாளர்கள் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை, கருவிகள் மூலமும், வினையூக்கிகள் மற்றும் சூரிய ஆற்றல் மூலமும், திட கார்பனாக மாற்றும் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்.
அவரது ஆய்வு முழுமையாக வெற்றி பெறுமானால், புவி வெப்பமயமாதலைக் குறைப்பதில் அது பெரும் உதவியாக இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan