KFC உணவகத்தின் கழிவறைக்குள் சடலம்! - இறந்து 30 மணிநேரம் கழித்து மீட்பு!!

25 புரட்டாசி 2025 வியாழன் 07:13 | பார்வைகள் : 4159
KFC துரித உணவகம் ஒன்றின் கழிவறையில் இருந்து ஆண் ஒருவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். குறித்த நபர் உயிரிழந்து 30 மணிநேரங்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Nord மாவட்டத்தின் Dunkerque
நகரில் உள்ள உணவகத்திலேயே இச்சடலம் நேற்று செப்டம்பர் 24, புதன்கிழமை நண்பகல் மீட்கப்பட்டது. 46 வயதுடைய Issam Z எனும் பெயருடைய வங்கி ஊழியரே உயிரிழந்திருந்த்தாகவும், அவர் அங்குள்ள CIC வங்கியில் பணிபுபவர் எனவும், கடந்தவார வெள்ளிக்கிழமை அவர் காணாமல் போயிருந்த நிலையில் அவரது சடலத்தை உணவக ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
காவல்துறையினர் அழைக்கப்பட்டு, சடலம் மீட்கப்பட்டது. முதல்கட்ட விசாரணைகளில், அவர் உயிரிழந்து 30 மணிநேரங்களுக்கு மேல் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1