பாராளுமன்றத்தின் புதிய அமர்வில் - பிரதமர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு!!
24 புரட்டாசி 2025 புதன் 19:27 | பார்வைகள் : 2822
அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணைக்கான அழைப்பை பதிவு செய்ய உள்ளதாக La France Insoumise கட்சியினர் அறிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அவரது அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட நிலையில், புதிய பிரதமராக Sébastien Lecornu நியமிக்கப்பட்டார். விரைவில் அமைச்சர்கள் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி இடம்பெற உள்ள பாராளுமன்ற அமர்வில் வைத்து அவர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
”"ஓய்வூதிய சீர்திருத்தத்தை ரத்து செய்வதற்கோ அல்லது பிரான்சுவா பேய்ரூவின் சிக்கனத் திட்டத்தைக் கைவிடுவதற்கோ Sébastien Lecornu எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை [...] நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்யப்படும்," என அக்கட்சியின் உத்தியோகபூர்வ சமூகவலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sébastien Lecornu இதுவரை அவரது அமைச்சர் பிரதிநிதிகளை அறிவிக்கவில்லை எனும் நிலையில், அவர் மீதான நம்பிக்கை பிரேரணை என்பது விவாதப்பொருளாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan