ஆசிரியருக்கு கத்திக்குத்து தாக்குதல்! - மாணவன் கைது!!
24 புரட்டாசி 2025 புதன் 10:30 | பார்வைகள் : 4829
ஆசியரை கத்தியால் குத்து தாக்குதல் மேற்கொண்ட மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். Strasbourg (Bas-Rhin) நகரில் இன்று புதன்கிழமை காலை 8 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
14 வயதுடைய சிறுவன் ஒருவன், அனது 65 வயதுடைய சங்கீத ஆசிரியரை கத்தியால் குத்தியுள்ளான். Robert-Schuman பாடசாலையில் இச்சம்பவம் காலை 8 மணி அளவில் இடம்பெற்றது. அதை அடுத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அவசர மருத்துவப்பிரிவினர் ஆசிரியருக்கு முதல் உதவிகளைச் செய்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, தாக்குதல் மேற்கொண்ட குறித்த மாணவன் கைது செய்யப்பட்டான். தாக்குதலுக்குரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை.
பயங்கரவாத தூண்டுதல் காரணமாக இடம்பெற்ற தாக்குதலா இல்லையா என்பது தொடர்பில் முதல்கட்ட விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan