மூன்று தொன் கொக்கைன் - A10 நெடுஞ்சாலையில் பறிமுதல்! - இருவர் கைது!!

23 புரட்டாசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1506
மூன்று தொன் கொக்கைன் போதைப்பொருளுடன் பயணித்த இரண்டு கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டில் ஒரு கனரக வாகனம் Saint-Arnoult (Yvelines) நகர சுங்கச்சாவடியில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் 18, வியாழக்கிழமை அன்று, நன்கு பொதி செய்யப்பட்ட 3,000 கிலோ கொக்கைனை சுங்கவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 1,500 கிலோ வீதம் இரு கனரக வானங்களும் பயணித்ததாகவும், முதலாவது வாகனம் Tours (Indre-et-Loire) நகரில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், விசாரணைகளின் பின்னர், இரண்டாவது வாகனம் Saint-Arnoult (Yvelines) நகர சுங்கச்சாவடியில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
35 மற்றும் 53 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரும் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் கொண்டுவந்த கொக்கைன் போதைப்பொருளின் மதிப்பு €72 மில்லியன் யூரோக்கள் எனவும், அவர்கள் போர்த்துக்கல்லில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1