விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது: அது தனக்கும் பொருந்தும் என்கிறார் கமல்

22 புரட்டாசி 2025 திங்கள் 06:48 | பார்வைகள் : 433
தவெக தலைவர் விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது. அது தனக்கும் பொருந்தும் என ராஜ்யசபா எம்பி கமல் கூறியுள்ளார்.
தவெக கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய், சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று நாகப்பட்டினத்தில் பிரசார கூட்டத்தில் பேசினார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலிடம், ' விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா ' என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கமல், விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது. இது எனக்கும் பொருந்தும். கூட்டம் ஓட்டாக மாறாது என்பது அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். திமுக கூட்டணி வலிமையாக உள்ளது' என்றார்.
மேலும், விஜய்க்கு என்ன ஆலோசனை கூற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், ' நல்ல பாதையில் செல்லுங்கள். தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்கு நன்மை செய்யுங்கள்,' என்றார்.
மேலும் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் மோகன்லாலுக்கு வாழ்த்துகள். இந்த விருது கிடைக்கவில்லை என யாரும் ஆதங்க படக்கூடாது. நிறைய திறமையானவர்கள் வரிசையில் நிற்க வேண்டும் என்றார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1