பரிஸ் பல்கலைக்கழக மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை!!
20 புரட்டாசி 2025 சனி 22:12 | பார்வைகள் : 2273
பரிஸ் 1 Panthéon-Sorbonne பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் சனிக்கிழமை அறிவித்தது. கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி, யூத மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் கலந்துரையாடல் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்தையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சியோனிசம் ஆதரவாளர்கள் அல்லது மத அடிப்படையில் குறிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பான பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக்குப் பிறகும், விசாரணை சிறப்பாக நடைபெற “தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை” எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலும், உரிய ஒழுங்கு குழு வழக்கை பரிசீலித்து முடிவெடுக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan