பரிஸ் : ”கூட்டுச் சதி” காரணமாக போக்குவரத்து பாதிப்பு! - விசாரணைகள் ஆரம்பம்!!

20 புரட்டாசி 2025 சனி 12:13 | பார்வைகள் : 2072
”கூட்டுச்ச் சதி” செய்யப்பட்டு ஐந்து மெற்றோ சேவைகளை இடை நிறுத்திய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். RATP இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
செப்டம்பர் 17, புதன்கிழமை காலை மிகவும் பரபரப்பான காலை நேரத்தில், 7.50 மணி அளவில் மெற்றோக்களில் இருந்து அவசர சமிக்ஞைகள் எழுப்பட்டன. தொடருந்தை நிறுத்தப்பட்டடது. அவசரகாலத்தின் போது தொடருந்தை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சமிக்ஞைகளை ஒரே நேரத்தில் பல்வேறு மெற்றோக்களில் அழுத்தப்பட்டது.
அதை அடுத்து தொடருந்துகள் நிறுத்தப்பட்டன. 3 ஆம், 5 ஆம், 8 ஆம், 9 ஆம் மற்றும் 11 ஆம் இலக்க மெற்றோக்கள் ஒரே நேரத்தில் இடை நிறுத்தப்பட்டது. ஆனால் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இச்செயலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1