அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆன் ஹிடால்கோ அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்!!
19 புரட்டாசி 2025 வெள்ளி 17:53 | பார்வைகள் : 3230
பரிஸ் மாநகரத் தலைவர் ஆன் ஹிதால்கோவின் செலவுகள் தொடர்பான சர்ச்சையின் பின்னணி, Mediapart வெளியிட்ட தகவல்களால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2020 முதல் 2024 வரை சுமார் 2.1 லட்சம் யூரோக்கள், அதில் 84,200 யூரோக்கள் உயர்தர ஆடைகளுக்கு மற்றும் 125,000 யூரோக்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. டியோர், பர்பெரி போன்ற பிராண்டுகளுக்கான ஆடைகள், நியூயார்க், டோக்கியோ, தஹிடி போன்ற இடங்களுக்கு செய்யப்பட்ட பயணங்கள் இவற்றில் அடங்கும்.
இந்த தகவல்களை “அவதூறான ஊடக பிரச்சாரம்” எனக் கண்டித்த ஹிதால்கோ, "பெயரில்லா அவதூறு புகார்" எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது அலுவலகம், அனைத்து செலவுகளும் சட்டப்படி இருக்கின்றன என்றும், அவை அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்காகவே பயன்படுத்தப்பட்டன என்றும் வலியுறுத்துகிறது. இருப்பினும், எதிர்க்கட்சி கடுமையாக விமர்சனம் செய்து, அரசு நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டி வருகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan