வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனாவின் வாக்காளர் அடையாள அட்டை முடக்கம்
19 புரட்டாசி 2025 வெள்ளி 12:12 | பார்வைகள் : 949
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.
கடந்த கால அரசியல் நிலவரம் மோசமடைந்ததை அடுத்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, தற்பொழுது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அவருக்கெதிரான மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்ததோடு, அரசாங்கத்துக்கே எதிராக பல்வேறு அமைப்புகள் களமிறங்கிய நிலையில், அவர் பதவியை விட்டு விலக நேர்ந்தது.
இந்த நிலையில், 2026 பெப்ரவரியில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, வங்காளதேச தேர்தல் ஆணையம் முக்கியமான நடவடிக்கையொன்றை எடுத்துள்ளது.
அதன்படி, ஷேக் ஹசீனாவின் வாக்காளர் அடையாள அட்டை முடக்கப்பட்டுள்ளது.
வங்காளதேச சட்டத்தின் படி, வாக்காளர் அடையாள அட்டை முடக்கப்பட்ட நபர்கள் வெளிநாட்டிலிருந்து வாக்களிக்க முடியாது.
எனவே, இந்த நடவடிக்கையால் ஷேக் ஹசீனாவுக்குத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லாதபடியாகியுள்ளது.
இதோடு மட்டும் இல்லாமல், அவரது குடும்பத்தினரான தங்கை ஷேக் ரெஹானா, மகன் சஜீப் வாஸெட் ஜாய், மகள் சைமா வாஸெட் புட்டுல், மற்றும் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் தாரிக் அகமது சித்திக் ஆகியோரின் வாக்காளர் அட்டைகளும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan