RER B பயணிகளுக்கு கவலையான செய்தி - மீண்டும் தாமதம்!!
19 புரட்டாசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 5121
RER B சேவைகளில் அனைத்து தொடருந்துகளையும் மாற்றி புதிய, நவீன தொடருந்துகளை சேவையில் இணைக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு, தொடருந்து தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த தயாரிப்பு தாமதமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருட ஆரம்பத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த தொடருந்துகள் 2027 ஆம் ஆண்டு செப்டம்பரிலேயே வழங்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் இரண்டு ஆண்டுகள் தாமதித்து 2029 ஆம் ஆண்டு செப்டம்பரிலேயே விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Valencienne (Nord) நகரில் உள்ள Petite-Forêt மற்றும் Crespin ஆகிய இரு Alstom நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன.
RER சேவைகளிலேயே மிக மோசமான தொடருந்துகளைக் கொண்டது B வழிச் சேவைகளாகும். அதன் நேரம் தவறாவை வீதமும் மிக மோசமானதாகும். 86.2% சதவீத ponctualité கொண்டதாக கடந்த ஜூன் மாதத்தில் பதிவாகியிருந்தது.
புதிய தொடருந்துகள் வருகை தாமதமானதால் RER B பயணிகளுக்கு கவலையான செய்தியாக மாறியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan