ஆன் இதால்கோவின் ஆடைகள் மற்றும் பயணச் செலவுகள் வெளியீடு: மக்கள் பணம் சர்ச்சையில்!!
18 புரட்டாசி 2025 வியாழன் 20:22 | பார்வைகள் : 4439
பரிஸ் மாநகர மேயர் ஆன் இதால்கோவின் செலவுக் கணக்குகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2020 முதல் 2024 வரை, அவர் தனது பிரதிநிதித்துவ செலவுகளுக்காக €84,200 பயன்படுத்தியுள்ளார். இதில், Dior, Burberry போன்ற பிரபல பிராண்டுகளிலிருந்து வாங்கிய ஆடைகள் மட்டும் €6,000-க்கு மேல் செலவாகியுள்ளது.
BHV, Repetto, Gérard Darel போன்ற கடைகளிலும் ஆடைகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த தகவல்களை Mediapart இணையத்தளம், Transparence citoyenne என்ற அமைப்பின் வழிகாட்டுதலால் வெளிக்கொணர்ந்துள்ளது.
மேலும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2023 வரை, அன்ன் இடல்கோ மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக சுமார் €125,000 செலவாகியுள்ளது. இதில் நியூயார்க், டோக்கியோ, தஹிதி (Tahiti) உள்ளிட்ட இடங்களுக்கு அவரது பயணங்கள் இடம்பெற்றுள்ளன.
தஹிதி பயணம் மிகுந்த விமர்சனங்களை உருவாக்கியது, ஏனெனில் அந்த பயணத்தை அவர் தனிப்பட்ட நோக்கில் நீட்டித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தச் செய்திகளால் பொது நிதி பயன்படுத்தும் முறைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan