குடும்ப உதவித்தொகைகள் 14 வயதிலிருந்து 18 வயதிற்கு மாற்றம்!!
19 ஐப்பசி 2025 ஞாயிறு 20:40 | பார்வைகள் : 5843
அரசு, இரண்டாவது குழந்தையிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவி தொகையானது 14 வயதில் இருப்பதை 18 வயதாக உயர்த்தும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது.
தற்போதைய திட்டத்தில், 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 20 வயது வரை மாதத்திற்கு €19 முதல் €75 வரை கூடுதல் தொகை வழங்கப்படுகிறது. இந்த மாற்றம் 2026 மார்ச் மாதத்தில் அமுலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் இந்த மாற்றத்தால் வருடத்திற்கு €200 மில்லியன் வரை சேமிக்க முடியும் என கூறுகிறது. ஆனால், பெற்றோர்களும் குடும்ப அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர், ஏனெனில் 14 வயது இளையோர் மாதத்திற்கு €293 வரை கூடுதல் செலவுகளை ஏற்படுத்தக்கூடியவர்கள்.
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், சிறிய மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் பெரிய அளவில் நிதி நட்டம் அடைவார்கள். எடுத்துக்காட்டாக, இரண்டு 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பம், ஆண்டு ஒன்றுக்கு €906 வரை இழக்கலாம். மூன்று பெரிய குழந்தைகள் உள்ள குடும்பங்கள், ஆண்டுக்கு €2,700க்கும் மேல் இழக்க வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டம் பெற்றோருக்கு சுமையை ஏற்படுத்தும் என்பதால், பலர் 14 வயதிலேயே கூடுதல் உதவித் தொகை தொடர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan