Navigo கட்டணம் மீண்டும் உயர்வு: மாணவர்களும் பாதிக்கப்படுவர்!!
16 ஐப்பசி 2025 வியாழன் 14:32 | பார்வைகள் : 6787
2026 ஜனவரி 1 முதல் Navigo பாஸ் 90.80 யூரோக்களாக உயர்கிறது. Île-de-France Mobilités நிர்வாக சபை ஒப்புதல் அளித்த இந்த கட்டண உயர்வு, பணவீக்கம் + 1% என்ற அடிப்படையில் செய்யப்படுகிறது.
மாதம் 1.20 யூரோக்களாக அதிகரிக்க உள்ளது. மாணவர்களுக்கான Imagine R பாஸும் வருடத்திற்கு 401 யூரோ ஆகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இது தொடர்ச்சியான கட்டண உயர்வாகும்.
எதிர்க்கட்சிகள் இந்த உயர்வை கடுமையாக கண்டிக்கின்றன. பஸ் சேவைகள் தனியார்மயமாக்கம், பெரும் முதலீடுகள் மற்றும் வருவாய் தேடும் திட்டமின்மையால் பொதுமக்கள் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் சேவையின் தரம் குறைய, தொடர்ந்து கட்டணங்கள் மட்டும் உயர்வதை விமர்சிக்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan