கனடாவில் பாடசாலை மீது தாக்குதல் நடத்தும் திட்டம் - 13 வயது சிறுவன் கைது

16 ஐப்பசி 2025 வியாழன் 12:46 | பார்வைகள் : 189
கனடாவில் பாடசாலை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ(Ontario) தண்டர் பே(Thunder Bay) பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன், இணையதளம் வழியாக சதித்திட்டம் போட்டு பாடசாலை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதை அடுத்து, அவர் மீது கடுமையான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது தொடர்பான விசாரணை அக்டோபர் 6ம் திகதி தொடங்கிய நிலையில், சம்பந்தப்பட்ட சிறுவன் வேறு நாட்டில் இருக்கும் நபர் ஒருவரிடம் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு பாடசாலை மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும், அந்த தாக்குதல் சமீபத்தில் அரங்கேறி இருக்கலாம் என்று பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டம் தொடர்பான இணைய அச்சுறுத்தல்கள் குறித்த தகவல் கிடைத்தவுடன் Thunder Bay வெறுப்பு குற்றப்பிரிவு பொலிஸார் தீவிர விசாரணையை தொடங்கினர்.