கனடாவில் விமான நிலயைத்திற்கு அருகாமையில் இடம் பெற்ற விபத்து - ஒருவர் பலி

15 ஐப்பசி 2025 புதன் 07:36 | பார்வைகள் : 303
கனடாவின் மிசிசாகா பகுதியில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையம் அருகே ஞாயிறு இரவு இடம்பெற்ற வாகன விபத்தில், ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து 6655 விமான நிலைய வீதி மற்றும் ஒர்லாண்டோ சந்திக்கும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் கார் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கினற்ன.
விபத்தில் கடுமையாக காயமடைந்த இருபது வயதுகளில் உள்ள இளைஞர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், திங்கட்கிழமை காலை, அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.